திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 20 பிப்ரவரி 2020 (21:53 IST)

விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகள் தெரிவித்த ஹிந்தி இயக்குநர் !

விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகள் தெரிவித்த ஹிந்தி இயக்குநர்

2015 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ரானும் ரவுடிதான். இந்த படத்தில் இணைந்த விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன்  படக்குழுவினர், அடுத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை உருவாக்கி வருகின்றனர். இப்படத்திலும் அனிருத் இசையமைக்கிறார்.
விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகள் தெரிவித்த ஹிந்தி இயக்குநர்
இந்நிலையில், இந்தப் புதிய படத்தில் சமந்தா இணைந்துள்ளார்.  இப்படத்தின்  தலைப்பை கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் வெளியிட்டனர், அனிருந்தின் இசையும் பரவலாகப் பேசப்பட்டது. இதைப் பார்த்த, பிரபல ஹிந்தி பட இசையமைப்பாளர், கரண் ஜோகர், இந்த வீடியோ,கதையின் தலைப்பு ஆகியவை வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்து இயக்குநர் விக்னேஷ் சிவனை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.