செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (10:51 IST)

அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்.. ஷாருக்கான் சாதனையை முறியடிக்கும் விஜய்??

Vijay Shah Rukh Khan

அரசியலில் களமிறங்கபோகும் நடிகர் விஜய் தனது கடைசி படத்திற்காக ஷாரூகானை விட அதிக சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வரும் விஜய், சமீபத்தில் தனது அரசியல் பயணத்தை அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கியுள்ளார். இதனால் திரை வாழ்விலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ படம் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், விஜய்யின் 69வது படமும், கடைசி படமுமான ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

 

விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இந்த படத்திற்காக நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளமாக பெற உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. நடிகர் ஷாரூக்கான் ரூ.250 கோடி சம்பளம் பெரும் நிலையில் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக அவர் உள்ளார். விஜய்யிம் சம்பளம் உறுதியானால் ஷாரூக்கானின் சாதனையை விஜய் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K