1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (18:22 IST)

’ஹேய் சினாமிகா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அஜித், சூர்யா படங்களுக்கு இடையே ரிலீஸா?

துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ’ஹேய் சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ’ஹேய் சினாமிகா’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 3 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிப்ரவரி 24ஆம் தேதி அஜித்தின் வலிமை திரைப்படமும் மார்ச் 10ஆம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் ரிலீசாக இருக்கும் நிலையில் இடையில் மார்ச் 3ஆம் தேதி இந்த படம் ரிலீசாவது சரியான சரிதானா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது