"செயலிழந்த ராணாவின் கிட்னி" தானம் செய்த பெண் இவரா? ராணாவின் விளக்கம்!

Last Updated: வியாழன், 25 ஜூலை 2019 (13:33 IST)
உலகமே வியந்து பார்த்த பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற ராணாவிற்கு கிட்னி செயலிழந்து விட்டதாவும், அவருக்கு கிட்னியை தனமாக அவரது தயார் கொடுத்து உயிரை மீட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 


 
அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரீட்சியமான ராணா பின்னர் பாகுபலி படத்தில் நடித்து உலக புகழ் பெற்றார். இப்படத்தில் பிரம்மாண்ட உடலமைப்பை பெற்று கட்டான தோற்றத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரளவைத்தார். பாகுபலி ஹீரோவுக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தை அவ்வளவு அவ்வளவு ரசித்தனர் ரசிகர்கள் . 
 
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒட்டுமொத்த திரையுலகினரும் ராணாவின் மெலிந்த தோற்றத்தை பார்த்து அதிர்ந்து விட்டனர். ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பும் தோலுமாக மெலிந்து போன ராணாவிற்கு என்ன ஆனது என ஆச்சர்யத்துடன் கேட்காதவர்களே இல்லை. ஆனால் அதற்கெல்லாம் சரியான விடையும் கிடைக்கவில்லை. 
 
இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது, அதாவது நடிகர் ராணா கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் இடைவிடாத உடல்பயிற்சி எடுத்துவந்ததால் அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு கிட்னி செயலியந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்  ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று  வந்த ராணாவிற்கு அவரது தயார் கிட்னியை தனமாக கொடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நடித்துள்ளது. அறுவை சிகிச்சை காரணமாக ராணா 6 மாத காலம் ஓய்வெடுக்க வேண்டுமென்று  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்ற தகவலை  தெலுங்கு நாளிதழ் ஒன்றில் படித்ததாக ராணாவிடம் ரசிகர்கள் கேட்டனர். 


 
தற்போது அதற்கு பதிலளித்துள்ள ராணா அது போன்ற செய்திகளை படிப்பதை நிறுத்துங்கள் என கூறியுள்ளார். இதன் மூலம் ராணாவின் உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதில் மேலும் படிக்கவும் :