புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2017 (11:50 IST)

சூடுபிடிக்கும் ஸ்ரேயா சரண் மார்க்கெட்

தமிழில் இடைவெளிவிட்ட ஸ்ரேயா சரணின் மார்க்கெட், மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 
உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் ஸ்ரேயா சரண். 2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இஷ்டம்’ படத்தின்  மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ஸ்ரேயா, 2003ஆம் ஆண்டு வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 4 தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.
 
தமிழில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தவர், தற்போது சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். தொடர்ந்து, ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் ‘நரகாசூரன்’ படத்திலும் நடிக்கிறார். அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சுந்தீப் கிஷண் மற்றும்  இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர்.