'X'தளத்தில் அதிக முறை ஹேஸ்டேக்...விஜய்யின் 'லியோ' படம் புதிய சாதனை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லியோ.
விஜய்யுடன் இணைந்து, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால், இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் விரைவில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.
இந்த நிலையில், லியோ பட ஹேஸ்டேக் டிவிட்டர் எனும் எக்ஸ் தளத்தில் 25 மில்லியன் பதிவுகளைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. அதாவது, எக்ஸ் தளத்தில் 2 ½ கோடி முறை லியோ ஹேஸ்டேக் பதிவிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.