வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (16:23 IST)

ஓ மணப்பெண்ணே வெற்றி… மீண்டுமொரு படத்தில் ஹரிஷ் கல்யாண்& பிரியா பவானி சங்கர்!

சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஓமணப்பெண்ணே திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது.

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டாவைக் கவனிக்க வைத்த திரைப்படம் பெள்ளி சூப்ளு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உடனே அதன் ரீமேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கினார்.

தன்னுடைய தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற பெயரில் படத்தின் போஸ்டர்களையும் வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பின்னர் இப்போது அதே படத்தைதான் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் உருவாகி ஓடிடியில் நேரடியாக வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார்.