வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (20:46 IST)

30 வயதான தமிழ் நடிகைக்கு திருமணம்.. காதலித்த நடிகரை மணக்கிறார்

haripriya
30 வயதான தமிழ் நடிகைக்கு திருமணம்.. காதலித்த நடிகரை மணக்கிறார்
தமிழ் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஹரி பிரியாவுக்கு தற்போது 30 வயது ஆகியுள்ள நிலையில் அவர் திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
வசிஷ்டா என்ற கன்னட நடிகரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை ஹரிப்பிரியாவின் திருமணம் தற்போது உறுதியாகியுள்ளது
 
சமீபத்தில் ஹரிப்பிரியா - வசிஷ்டா திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் இதில் கன்னட திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இவர்களுடைய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுவதை அடுத்து ரசிகர்கள் ஹரிப்பிரியா வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Siva