ஹரி இயக்கத்தில் விக்ரம் - தயாராகிறது சாமி 2

ஹரி இயக்கத்தில் விக்ரம் - தயாராகிறது சாமி 2


Sasikala| Last Modified செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (15:49 IST)
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் சாமி. அதேபோல் ஒரு ஆல்டைம் ஹிட் விக்ரமுக்கு பிறகு அமையவில்லை.

 
 
சிங்கம், சிங்கம் 2, 3 என எடுத்துத் தள்ளும் ஹரி ஏன் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இன்னும் எடுக்காமலிருக்கிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஹரி - விக்ரம் உறவில் ஏற்பட்ட உரசல்தான் இவர்கள் அருள் படத்துக்குப் பிறகு இணையாமல் போனதற்கு காரணம் எனவும் கூறப்பட்டது. காலத்தால் ஆறாத ரணம் உண்டா? ஹரியும், விக்ரமும் பழையபடி ஒன்றாகியிருக்கிறார்கள்.
 
இரு முகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹரி, எஸ் 3 படம் முடிந்ததும் சாமி இரண்டாம் பாகத்தை இயக்குகிறேன். விக்ரமே அதில் நடிக்கிறார். இரு முகனை தயாரித்திருக்கும் தமீன் பிலிம்ஸே படத்தை தயாரிக்கும் என்றார்.
 
இரு முகன், எஸ் 3 இரண்டுக்கும் ஹரிஸ் ஜெயராஜ்தான் இசை. சாமி படத்துக்கும்கூட அவர்தான் இசையமைத்திருந்தார். சாமி இரண்டாம் பாகத்துக்கும் அவரே இசையமைப்பார் என்றார் ஹரி.


இதில் மேலும் படிக்கவும் :