1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:02 IST)

ஹீரோ அவதாரம் எடுத்த யூடியூப் பிரபலம் ஹரிபாஸ்கர்!

வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகத்தில் திறமையுள்ள பல நபர்கள் திரைத்துறையில் சாதித்து வருகின்றனர். அந்த யூடியூபில் சிங்கிள் நபராக இரண்டு மூன்று கதாபாத்திரம் ஏற்று பல காமெடி வீடியோகளை பதிவேற்றம் செய்து குறுகிய காலத்தில் சூப்பர் பேமஸ் ஆனவர் ஹரிபாஸ்கர். 
 
இவர் தற்ப்போது ரிதுன் என்பவர் தயாரித்து இயக்கும் "நினைவோ ஒரு பறவை" என்ற படத்தில் நடித்து வருகிறார்.  மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் 50 வயது நிரம்பிய கணவன் மனைவியின் பாரிஸ் பயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது. கடந்து வந்த பாதை,  நிகழ்கால சவால்கள் என அத்தனை இன்னல்களையும் மீறி அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் அவசியம் என்ன என்பதை இப்படம் விளக்குகிறது .
 
இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள் வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர் விரைவில் அதன் அறிவிப்பு வரும் இவர்கள் தான் கதையின் நாயகன் நாயகி. தற்போது மீனா மினிக்கி என்ற பாடல்  மிகப்பெரிய சாதனையாக வெளிவந்த 6 நாட்களில் 7 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.