புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (17:35 IST)

சந்தானத்தின் ’’டிக்கிலோனா’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து காமெடியில் சிறந்து விளங்கியவர் நடிகர் சந்தானம்.
 
இவர் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
 
இந்நிலையில், நடிகர் சந்தானம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வம் சுந்தரம், சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், சந்தானம்,  நடிப்பில் உருவாகியுள்ள படம் டிக்கிலோனா, இப்படத்தில் அவருடன் இணைந்து ஷெரின்,அனைகா ஹிரோயின்களாக நடித்துள்ளனர்.மேலும் ஹர்பஜன் சிங் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் கே இயக்கியுள்ளார்.  இப்பபடம் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 
அதில்,  நடிகர் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம்  வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி ZEE5 OTT தளத்தில் ரிலீஸாகும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்தத் தகவலை டிக்கிலோனா படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.