1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (18:26 IST)

கணேஷ்கர் தலைமறைவாக இருந்தது உண்மையா? நடிகை ஆர்த்தி விளக்கம்!

காமெடி நடிகர் கணேஷ்கர் கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அவரது மனைவியும் நடிகையுமான ஆர்த்தி விளக்கமளித்துள்ளார் 
 
சம்பவ தினத்தன்று தன்னைப் பிக்கப் செய்வதற்காகத்தான் காரில் கணேஷ்கர் வந்து கொண்டிருந்ததாகவும் ஆனால் அவர் ஸ்பீடு பிரேக்கரை கவனிக்காமல் வேகமாக காரை ஓட்டியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் ஆர்த்தி கூறினார்
 
விபத்து காரணமாக அவருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான் மருத்துவமனையில் அனுமதித்தார்கள் என்றும்,  தான் சம்பவ இடத்திற்கு சென்று அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி விட்டுத்தான் வீடு திரும்பியதாகவும் கூறினார்
 
ஆனால் கணேஷ்கர் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லாமல் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றதால் தான் அவர் தலைமறைவாக இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டது என்றும் அவர் தலைமறைவாக இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்