செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 15 செப்டம்பர் 2021 (06:39 IST)

HBD நடிகை ரம்யா கிருஷ்ணன்!

HBD நடிகை ரம்யா கிருஷ்ணன்!
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரம்யாகிருஷ்ணன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. கடந்த 1983 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன் அதன்பின் படிக்காதவன், முதல் வசந்தம், பேர்சொல்லும்பிள்ளை, ஜல்லிக்கட்டு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் 
 
ரம்யா ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப் பெரிய புகழை பெற்று தந்த திரைப்படம் ரஜினியின் படையப்பா என்பதும் சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் அவரை உலக அளவில் கொண்டு போய் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ரம்யா தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் வெப்துனியா சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்