1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2017 (17:16 IST)

ஆஸ்தான இயக்குனர் கைவிட்ட சோகத்தில் இளம் நடிகை...

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான போது நீண்ட நாட்கள் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.


 
 
அதே போல, சில ஆண்டுகள் ஹன்சிகா தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாகவே இருந்தார். தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார்.
 
ஹன்சிகாவின் போதாத காலம் அவரது மார்கெட்டில் சரிவு ஏற்பட்டது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான போகன் படமும் அவருக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரவில்லை.
 
தற்போது பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடித்து வரும் ஹன்சிகா சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், ஹன்சிகாவின் மனதில் ஒரு பெரிய வருத்தம் உள்ளதாம்.
 
ஹன்சிகாவின் ஆஸ்தான் இயக்குனரான சுந்தர் சி தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பது அவருக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளதாம்.