வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 11 அக்டோபர் 2017 (18:29 IST)

ரசிகர்கள் முன் நடனமாடி செல்ஃபி எடுத்த ஹன்சிகா

கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஹன்சிகா ரசிகர்கள் முன் நடனமாடி செல்ஃபி எடுத்து அசத்தியுள்ளார்.


 

 
நடிகை ஹன்சிகாவுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். தெலுங்கு சினிமாவில் இவருக்கான மார்க்கெட் இல்லாத நிலையில் தற்போது விளம்பரங்களில் நடித்து வருகிறார். 
 
அவர் ஈரோட்டில் ஒரு மொபைல் கடையை திறப்பதற்காக வந்திருந்தார். ஹன்சிகாவை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் கூடியது. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக இருந்தது. இதையடுத்து சேலத்தில் நகை கடை திறப்பு விழா ஒன்றுக்கு சென்றிருந்தார். அங்கும் அவரை காண ரசிகர் கூட்டம் அலைமோதியது.
 
மேலும் அவர் ரசிகர்கள் முன் நடனமாடி, செல்ஃபி எடுத்து அசத்தியுள்ளார்.