1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (20:47 IST)

ஒரு வயது சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ஜி.வி.பிரகாஷ்

G. V. Prakash Kumar
ஒரு வயது சிறுவனின் மூளைக்கு அருகில் உண்டான கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு  ஆன்லைனில் மருத்துவத்திற்கு பண உதவி கோரிய நபருக்கு ரூ.75 ஆயிரம் அனுப்பி உதவியுள்ளார் ஜிவி.பிரகாஷ்குமார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இவர் தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வாத்தி ஆகிய படங்களுக்குப் பிறகு கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதேபோல் விக்ரமின் தங்கலான் படமும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. அதேபோல், சூர்யா- சுதா கொங்கராவின் புறநானூறு படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், ஒரு வயது சிறுவனின் மூளைக்கு அருகில் உண்டான கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு  ஆன்லைனில் மருத்துவத்திற்கு பண உதவி கோரிய நபருக்கு ரூ.75 ஆயிரம் அனுப்பி உதவியுள்ளார். ஜிவி.பிரகாஷ்குமார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இவர் கிங்ஸ்டன் என்ற படத்தை தயாரித்து வருவதுடன், ஏன் என்று, பாசா என்கிற ஆண்டனி படத்தில்  நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.