புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (12:56 IST)

அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய ஜி.வி.பிரகாஷ்

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் ஜி.வி.பிரகாஷ்.



 
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூரைச் சேர்ந்த அனிதா, நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம், தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அனிதாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நேரடியாக அனிதா வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறியுள்ளார். ‘அரசின் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து அனிதாவைக் கொன்றுவிட்டதாகவும்’ அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக விஷயங்களில் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.