1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 16 மே 2024 (17:24 IST)

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிய இருப்பதாக சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார் என்பதும் அதேபோல் சைந்தவியும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் இருவருமே தங்களுடைய அறிவிப்பில் பரஸ்பரம் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் எங்களுடைய தனி உரிமையை காப்பாற்றும் வகையில் ஊடகங்கள் நண்பர்கள் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர். 
 
ஆனால் ஒரு சில இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் இஷ்டத்துக்கு தங்கள் கற்பனை கதைகளை ஓடவிட்டனர் என்பதும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி எதற்காக பிரிந்தார்கள்? எப்படி பிரிந்தார்கள்? என்று பல்வேறு கதைகளை கட்டி விட்டதால் இருவரும் தற்போது தங்களுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளனர். 
 
இது குறித்து சைந்தவி கூறியபோது நானும் ஜிவி பிரகாஷும் பல வருடங்கள் நண்பர்களாக இருந்துள்ளோம், இனியும் நாங்கள் நண்பர்களாக இருப்போம், எங்களைப் பற்றிய செய்திகளையும் கதைகளையும் பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது. ஏற்கனவே நாங்கள் தெளிவாக விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவித்து இருந்தும் ,ஆதாரமற்ற முறையில் எங்களது வாழ்க்கையை படுகொலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் 
 
அதேபோல் ஜீவி பிரகாஷ் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த அனுமானங்களின் அடிப்படையில் சேனல்களில் கதையை எழுதி வருகின்றனர். தங்கள் சொந்த கற்பனையை மற்றும் கதைகளை வளர்த்துக் கொண்டு எங்களுடைய வாழ்க்கையை படுகொலை செய்வதை ரசிக்கின்றனர். இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்த ஒரு சிலருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Edited by Siva