வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (14:09 IST)

“தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப் போறியா?” – ஜி.வி.பிரகாஷ்

‘தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப் போறியா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்
 
தமிழர்கள் காவிரிக்காகப் போராடிவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் இன்று முதல் மேட்ச் நடைபெற இருக்கும் நிலையில், பலரும் பலவிதமான வழிகளில் எதிர்ப்பைக் காட்ட யோசனை கூறி வருகின்றனர்.
 
அந்த வரிசையில், ஜி.வி.பிரகாஷும் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். “அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்கப் போறியா? சுதந்திரமா உன் கருத்தைச் சொல்ல முடியலன்னா, விளையாட்டை தவிர்க்கப் போறியா? தடையைத் தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப் போறியா?” என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.