1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (12:54 IST)

'மெர்சல்' ஜிஎஸ்டி காட்சிகளுக்கு பா.ரஞ்சித் ஆதரவு

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் எதிர்க்கட்சிகள் இந்த வசனத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றன.



 
 
இந்த நிலையில் 'கபாலி' , 'காலா' பட இயக்குனர் பா.ரஞ்சித், மெர்சல் படத்தின் ஜிஎஸ்டி வசனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மெர்சல் படத்தின் ஜிஎஸ்டி வசனத்திற்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதனால் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அம்பேத்கர் பெயரை சில கட்சிகள், அமைப்புகள் சிதைக்க நினைப்பதாக கூறிய ரஞ்சித், சமூகத்தில் தலித் என்ற சொல் அவசியம் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.