செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 12 மார்ச் 2022 (15:32 IST)

காதலி மஞ்சிமா பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய கெளதம் கார்த்திக்!

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.   
அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான "இப்படை வெல்லும்" சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.  ஆனால், அவரால் உச்ச நடிகையாக வரமுடியவில்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது மஞ்சிமா பிறந்தநாளுக்கு கெளதம் கார்த்திக் ஸ்பெஷல் வாழ்த்து கூறியுள்ளார்.