வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2017 (21:49 IST)

அடல்ட் காமெடி ஹீரோவாகும் வாரிசு நடிகர்!!

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.


 
 
எனினும் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புக்கள் குவிந்தன. தற்போது வெளியான இவன் தந்திரன், ரங்கூன் படங்கள் இவருக்கு கைகொடுத்தது.
 
தற்போது அடல்ட் காமெடியாக உருவாகும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், நிக்கி கல்ராணி, மனோபாலா, கருணாகரன், ராஜேந்திரன், சதீஷ், ரவி மரியா, ஆர்.கே. சுரேஷ், மயில்சாமி, பாலா சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். எஸ்.தங்கராஜ் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை பற்றி கவுதம் கார்த்திக் சமீபத்தில் பேசியுள்ளார்.
 
அவர் கூறியதாவது, பல ஹீரோக்கள் நடிக்க மறுத்த நிலையில் வாய்ப்பு என்னை தேடி வந்தது. இதையடுத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் என்னிடம் கதை சொல்வதற்கு முன் பாடல்களை போட்டுக்காட்டினார். செமையாக இருந்தது. கதையை கேட்டதும் சிரிப்பை அடக்க முடியவில்லை நடிக்க சம்மதித்தேன் என தெரிவித்துள்ளார்.