வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:25 IST)

இனி ஆண்களும் எடுக்கலாம் சைல்ட் கேர் லீவ் – ஆனால் சில நிபந்தனைகள்!

அரசு ஆண் ஊழியர்களும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள சைல்ட் கேர் லீவ் எடுக்காலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பணியில் இருக்கும் ஆண் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக சம்பளத்துடன் கூடிய ஓய்வை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஊழியர் மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ, அல்லது மனைவி இல்லாத நிலையிலோ அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளாகவோ இருக்க வேண்டும்.  இதனை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.

அப்படி விடுமுறை எடுக்கும் நபருக்கு முதல் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பும், 2-வது ஆண்டில் 80 சதவீத ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளி குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையின் 22 வயது வரை தேவைப்படும் போதெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்.