வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (17:53 IST)

அடல்ட் இமேஜ்ஜில் இருந்து தப்பித்தேன்: கவுதம் கார்த்திக்!

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் அவரது தந்தை கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் மிஸ்டர் சந்திரமவுலி. இந்த படத்தில் ரெஜினா நாயகியாக நடித்திருந்தார். 
 
தொடர்ந்து விஷாலை வைத்து இயக்கிய இயக்குனர் திரு இப்படத்தை இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், மைம் கோபி, சதீஷ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில், இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த படம் வெளியானதால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் கவுதம் கார்த்திக். 
 
தொடர்ந்து ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் படங்களில் நடித்து அடல்ட் ஹீரோ என்ற முத்திரை குத்தப்பட்டு வந்த கௌதம் கார்த்திக்கிற்கு இப்படம் அவரை மாறுபட்ட விதத்தில் காட்டியது. 
 
இதனால், அடல்ட் இமேஜ்ஜிலிருந்து தன்னை இப்படம் முழுவதும் காப்பாற்றி விட்டதாக கூறி அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.