திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (13:47 IST)

கவுண்டமணி பேசிய பன்ச் வசனங்களை வைத்தே ஒரு பாடல்… ஒத்த ஓட்டு முத்தையா பட அப்டேட்!

கவுண்டமணி கடைசியாக நடித்த திரைப்படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை திரைப்படம். இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழனிச்சாமி வாத்தியார் என்று ஒரு படத்தில் நடித்து வரும் அவர் இப்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸான நிலையில் பின்னர் படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படத்துக்காக கவுண்டமணி தயாராகும் காட்சிகளை காட்டியிருந்தனர்.இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

படத்தின் 90 சதவீத ஷூட்டிங்கை முடித்துள்ளார் இயக்குனர். இந்த படத்துக்காக இதுவரை கவுண்டமணி பேசி ஹிட்டான பன்ச் வசனங்களை வைத்து ஒரு ப்ரமோஷன் பாடலை உருவாக்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் சாய் ராஜகோபால் கூறியுள்ளார்.