1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (19:48 IST)

நடிகர் திலிப்குமாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

இந்தி சினிமாவின் பழம் பெரும் நடிகரான திலீப்குமார்(95) கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு நெஞ்சில் நோய் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். அதனால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவரது உடல் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் இருப்பது மருத்துவர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து மருத்து நிபுணர்கள் அவரை அவசர  பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.


இதுபற்றிக் அந்த மருத்துவமனையின் துணை தலைவர் அஜய் குமார் பாண்டே கூறியபோது, சிகிச்சைக்குப் பிறகு திலிப்குமாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும் தெரிவித்தார்.