வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (12:23 IST)

பேட்மிண்டனில் தங்கம் வென்ற நடிகர்; யார் தெரியுமா?

நடிகர்கள் நடிப்பை தாண்டி பன்முக தன்மை கொண்டவர்களாக உள்ளனர். தல அஜித் கார் ரேசில் ஆர்வம் உடையவர். அதுபோலவே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டவர் அம்பானி ஷங்கர். இவர் அம்பாசமுத்திரத்தில் அம்பானி என்ற படத்தின் மூலம் பிரபலமானவர்.
பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் கருணாஸ், நவ்நீத் கௌர் ஆகியோரது நடிப்பில் வந்த படம் அம்பாசமுத்திரம் அம்பானி. இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான காமெடி நடிகர் அம்பானி ஷங்கர். ஜி, ஆறு, இந்திரலோகத்தில் நா அழகப்பன், பட்டத்து  யானை, 144, பட்டதாரி உள்பட 25க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். எல்லா நடிகருக்கும் நடிப்பைத் தாண்டி இன்னொரு பக்கமும் இருக்கிறது. அந்த அடிப்படையில் ஷங்கர் பேட்மிண்டனில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 
 
இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் நடந்த மாநில அளவிலான பாரா பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இவர் உயரம் குறைந்தவர் என்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.