நீ பிராமணாள் ஆக போறியா? – சர்ச்சையை கிளப்பிய காட்மேன் டீசர்!
பிராமணர்களை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாக ‘காட்மேன்’ வெப் சீரிஸ் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தமிழில் தற்போது பல இணைய தொடர்கள் வெளியாகி வரும் நிலையில் சில வெப் சீரிஸ்கள் சர்ச்சைக்கும் உள்ளாகி வருகின்றன. சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘குயின்’ தொடருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஜீ5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “காட்மேன்” என்ற வெப் சிரீஸ் வெளியாக உள்ளது. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இந்த இணைய தொடரின் டீசரில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.