புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (08:14 IST)

கோட் படத்தின் ஓப்பனிங் சீனை கேப்டன் ரசிகர்கள் மிஸ் பண்ணிடக் கூடாதாம்… ஏன் தெரியுமா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் படத்தில் இடம்பெறும் காட்சி சம்மந்தமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் முதல் காட்சியிலேயே அவர் தோன்றிவிடுவார் என சொல்லப்படுகிறது. பின்னர் க்ளைமேக்ஸ் காட்சியிலும் அவர் இடம்பெறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.