வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (12:47 IST)

தளபதி விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஜார்ஜியா ரசிகர்!

தளபதி விஜய் தற்போது ஜார்ஜியாவில் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தளபதி விஜய் தங்கியிருக்கும் ஜார்ஜியா ஹோட்டலில் சமீபத்தில் விஜய் ரசிகர் ஒருவர் சென்று அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி உள்ளதாக தெரிகிறது. அந்த ஆட்டோகிராப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கும் நிலையில் அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டில் ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது இந்த நிகழ்வில் இருந்து தெரிய வருகிறது
 
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்தப் படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தளபதி விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஜார்ஜியா ரசிகர்!