கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்கும் ஹரஹர மஹாதேவகி

Sasikala| Last Modified திங்கள், 7 நவம்பர் 2016 (17:01 IST)
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்கும் ஹர ஹர மஹாதேவகி என்ற படத்தை நேற்று தொடங்கியுள்ளனர். அறிமுக இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார். 

 
தங்கம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் முதலிலேயே கைப்பற்றி இருக்கிறது. 
 
ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் படங்கள் ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஹர ஹர மஹாதேவகி இளைஞர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :