புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:55 IST)

கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன்: வைரல் புகைப்படம்!

கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன்: வைரல் புகைப்படம்!
கடந்த பல வருடங்களாக தமிழ் திரையுலகில் ஆக்கிரமித்து வந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. ஒரு காலத்தில் இவர் நடிக்காத படமே இல்லை என்று கொள்ளலாம் 
 
சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ் உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த இவர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காமெடி கிங் கவுண்டமணி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது கவுண்டமணியின் காமெடியை பார்த்து வளர்ந்த சிவகார்த்திகேயன் தற்போது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது