தெலுங்கு நாரப்பா பார்த்து அப்செட் ஆன ஜி வி பிரகாஷ்!
தமிழில் தனுஷ் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. தனுஷ் படத்தில் வெங்கடேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் நாரப்பா திரைப்படம் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்நிலையில் அசுரன் படத்தில் இருந்து இரண்டு பாடல்களையும், தீம் மியுசிக்கையும் பயன்படுத்தியுள்ள தெலுங்கு படக்குழுவினர் அதற்காக ஜி வி பிரகாஷுக்காக எந்த தொகையும் கொடுக்கவில்லையாம். தமிழில் தயாரித்த கலைப்புலி தாணுவே தெலுங்கு படத்தையும் தயாரித்துள்ள நிலையில் இவ்வாறு பணம் எதுவும் கொடுக்காமல் பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜி வி பிரகாஷ் பயங்கர அப்செட் ஆகியுள்ளாராம்.