வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (00:30 IST)

ஜி.வி.பிரகாஷூக்கு இந்த படமாவது தேறுமா?

ஒழுங்காக இசையமைத்து கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷை விதி நடிகராக்கிவிட்டது. அதுவும் தெரியாத்தனமாக 'டார்லின்', திரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற இரண்டு படமும் ஹிட்டாகிவிட்டது. டார்லிங் நல்ல ஸ்கிரிப்ட் காரணத்தாலும், த்ரிஷா இல்லைனா நயன்தாரா பலான வசனத்தாலும் ஓடிய நிலையில் இரண்டு படங்களும் ஜி.வி.பிரகாஷின் நடிப்புக்காக ஓடியதாக இண்டஸ்ட்ரி தவறாக நினைத்துவிட்டது..

 
அதன் பிரதிபலன் இன்றுவரை ஜி.வி.பிரகாஷின் அடுத்த ஹிட் வரவில்லை. இனிமேலும் வருமா? என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்
 
இந்த நிலையில் சமீபத்தில் குற்றம் 23' என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அறிவழகன் தனது அடுத்த படத்திற்கு நாயகனாக ஜி.வி.பிரகாஷை தேர்வு செய்துள்ளார். ஒரு ஆக்சன் படத்திற்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத ஜி.வி.பிரகாஷை அவர் தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படமாவது அறிவழகனின் அதிர்ஷ்டத்தால் ஓடுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்