இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!
சூர்யா நடப்பில் உருவான கங்குவா திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த படம் மொத்தமாக திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் இப்போது சூர்யா குறுகிய கால படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் உடனடியாக அமல் நீரத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து உரையாடிய சூர்யா “இனிமேல் வருடத்துக்கு இரண்டு படங்கள் என்னிடம் இருந்து வரும்” எனக் கூறியுள்ளார்.