செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 மே 2022 (09:36 IST)

செல்ஃபி படத்துக்குப் பின் மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் & கௌதம் மேனன் கூட்டணி!

ஜி வி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடிப்பில் உருவான செல்ஃபி திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றது.

ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு செல்பி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை வெற்றிமாறனின் உதவியாளரான மதிமாறன் இயக்கினார். நீட் தேர்வுக்குப் பின்னர் கல்லூரிகளில் எப்படி கல்வி வியாபாரப் பொருளாக மாறியுள்ளது என்பதை தோலுரித்துக் காட்டும் விதமாக இந்த படம் உருவாகி இருந்தது.. கௌதம் மேனன் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் கவனத்தை ஈர்த்த படமாக அமைந்தது.

இந்நிலியில் இந்த படத்துக்குப் பிறகு மீண்டும் ஜி வி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் கூட்டணி மற்றொரு படத்தில் இணைய உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் விவேக் இயக்குகிறார்.