1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (21:14 IST)

நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்' .. மறைந்த இயக்குநருக்கு ஜி.வி பிரகாஷ் இரங்கல்

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியவர் வெங்கட் பாஸ்கர் என்ற அருண் பிரசாத். இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகவுள்ள  4 ஜி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையத்திற்கு தந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அருண் பிரசாத் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் சினிமா  துரையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்தும் நடிகரும் இசைமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், 'எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்... அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.. நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்'  என்று பதிவிட்டுள்ளார்,