செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2017 (12:41 IST)

படம் பார்க்கும் பெண்களுக்கு இலவச சேலை; எந்த படம் தெரியுமா?

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா  இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலமாகத் தயாரித்துள்ளார்.

 
இப்படம் வரும் 15ம் தேதி திரைக்கு வரவிருப்பதால், இப்படத்தை திரைக்கு சென்று படம் பார்க்கும் பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படம் வெளியாகும் ஒவ்வொரு  திரையரங்கிலும், ஒவ்வொரு காட்சியின் போதும், ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு நியூ பிராண்ட் சேலை இலவசமாக  வழங்கப்படவுள்ளது.

இந்த விளம்பர நிகழ்ச்சி வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மட்டும் நடக்கவுள்ளது. பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், பெண் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.