புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (16:28 IST)

நயன்தாராவைப் பாராட்டிய ஜோதிகா!!

நயன்தாரா ஆசீர்வதிக்கப்பட்டவர் என பாராட்டியுள்ளார் ஜோதிகா.


 
 
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தில், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோரும் நடித்துள்ளனர். 
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார்.
 
“ரீஎன்ட்ரியான ’36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு, ‘மகளிர் மட்டும்’ படத்தை நான் தேர்வுசெய்ய கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆனது. 
 
இந்த விஷயத்தில் நயன்தாரா ஆசீர்வதிக்கப்பட்டவர் என நினைக்கிறேன். அவருக்கு ஏற்ற கண்டெண்ட் ரீதியான படங்கள் தொடர்ந்து கிடைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.