மூன்று மாதங்கள் கணவருடன் பேசவில்லை: நடிகை ஸ்ரீதேவி ஓபன் டாக்!

Sasikala| Last Modified திங்கள், 5 ஜூன் 2017 (15:31 IST)
ஸ்ரீதேவி தனது கணவரான போனி கபூரின் தயாரிப்பில் உருவாகும் ‘மாம்’என்ற இந்தி திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தை ஜுலை மாதம் 7-ம் தேதி பட வெளியிட தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர்   திட்டமிட்டுள்ளார்.
 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என வெளியிட திட்டமிட்டுள்ளனர். 4 மொழிகளுக்கும் ஸ்ரீதேவியே டப்பிங் பேச உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ரவி உத்யவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இது  ஸ்ரீதேவியின் 300வது படம் ஆகும்.
 
மாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, போனி கபூர், அவர்களின் மகள்கள்  ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் கலந்து கொண்டனர். மாம் படத்தில் நடித்தபோது நான் மூன்று மாதங்கள் என் கணவர்  போனிஜியுடன் பேசவே இல்லை. காலையில் குட்மார்னிங் சொல்வேன், ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது குட் நைட்  சொல்வேன் அவ்வளவு தான். மேலும் நான் நடிக்க வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது என ஸ்ரீதேவி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :