1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: திங்கள், 8 மே 2017 (13:17 IST)

பப்ளி நடிகைக்கு சிபாரிசு செய்கிறாரா நடனம்?

வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவரும் பப்ளி நடிகைக்கு, நடன இயக்குநர் சிபாரிசு செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
தான் இயக்கிய படத்தில், பப்ளி நடிகையை முதன்முதலாக ஹீரோயின் ஆக்கினார் நடனம். அவரின் வெள்ளைத்தோலைப்  பார்த்து, கோடம்பாக்கமே கொஞ்சம் சூடாகித்தான் போனது. சுட்டுப் போட்டாலும் பப்ளிக்கு நடிப்பு வராது. ஆனாலும், தங்கள்  படங்களில் நடிக்கவைத்து அழகு பார்த்தார்கள் அவரிடம் மயங்கியவர்கள். 
 
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்தானே? இப்போது, ‘ச்சீ… இந்தப் பழம் புளிக்கும்’ என்ற கதையாக நடிகையை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், தன்னை அறிமுகப்படுத்திய நடனத்திடம் பப்ளி கண்ணீர் வடிக்க, அவரோ ஒரு படத்தில் தனக்கே ஜோடியாக்கிவிட்டார். 
 
அதுமட்டுமல்ல, தனக்குத் தெரிந்தவர்களிடமும் நடிகைக்கு வாய்ப்பு தரும்படி சிபாரிசு செய்கிறாராம். ‘முதல்ல அவங்களுக்கு நடிக்க சொல்லிக் கொடுங்க’ என்று வெளிப்படையாகவே சொல்கிறார்களாம் அவர்கள்.