புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (18:03 IST)

டோலிவுட் வெற்றியை அடுத்து பாலிவுட் செல்லும் தனி ஒருவன்!

அரவிந்த்சாமியின் இரண்டாம் வருகை தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து, நாயகனையே விழுங்கியவர். இவ்வளவு சிறப்பாக அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

 
தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கான துருவாவிலும் நடித்தார். தெலுங்கில் ராம் சரண் தேஜா, அரவிந்த் சாமி, ராகுல் ப்ரீத் சிங்  நடித்த இப்படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றது.
 
தெலுங்கை தொடர்ந்து ஹிந்தியிலும் “தனி ஒருவன்” படத்தை ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அந்த செய்தி அதிகாரப்பூர்வமாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஜெயம் ரவி நடித்த வேடத்தில் சித்தார்த்  மல்ஹோத்ரா நடிக்க இருக்கிறார். அரவிந்த சாமி நடித்த கதாபாத்திரத்தில் அர்ஜூன் கபூர் நடிப்பதாகவும், சபீர் கான் இயக்கத்தில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.