1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2024 (17:13 IST)

ஒரு சாதாரண மிஸ்ஸிங் கேஸ் அனுமார் வால் போல நீண்டுகிட்டே போவுது: ‘ஃபயர்’ டிரைலர்..!

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்த "ஃபயர்" என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் ஜிம் ட்ரைனராக இருக்கும் நிலையில், அவரிடம் வரும் பெண்கள் திடீரென மாயமாகி கொலை செய்யப்படுவதும், அதற்கு காரணம் யார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். இதுவே இந்த படத்தின் கதை என்பதை ட்ரெய்லர் மூலம் அறிய முடிகிறது.

பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரட்சிதா மகாலட்சுமி, சாக்சி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஜேஎஸ்கே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ளனர். இப்படத்திற்கு டி. கே. இசையமைத்துள்ளார்.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் நடித்ததை குறித்த ரட்சிதா மகாலட்சுமி சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாகவும், அதற்கு இயக்குனர் கே. எஸ். கே. பதிலடி கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.


Edited by Mahendran