திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (08:40 IST)

விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷ்ணு விஷால் நடித்த எப்ஐஆர் என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்தது என்றும் செய்திகள் வெளியானது 
 
திரில்லிங் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் வெற்றிப் படத்தைக் கொடுக்கும் நடிகராக ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறியுள்ளன 
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ஆம் தேதி அதாவது நாளை அமேசான் ஓடிடியில் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே திரை அரங்குகளில் இந்த படத்தை பார்க்காதவர்கள் நாளை அமேசான் ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.