வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2019 (09:15 IST)

புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: பிரபல நடிகைக்கு மோடி அழைப்பு!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில் தலைவர்களின் பெயரில் இமெயில் அனுப்புவது, மறைந்த தலைவர்களின் குரல்களில் ஓட்டு கேட்பது போன்ற கூத்துக்கள் நடந்து வருகிறது
 
அந்த வகையில் பிரதமர் மோடி பல பிரபலங்களுக்கு தனது டுவிட்டர் பக்கம் மூலம் புதிய இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தும் பாஜகவை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டும் வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியும் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகிறார்.
 
அந்த வகையில் பிரதமர் மோடியின் டுவீட் ஒன்று நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராமுக்கு வந்துள்ளது.இந்த டுவீட்டை பார்த்து சந்தோஷத்தின் உச்சிக்கு சென்ற காயத்ரி ரகுராம், பிரதமருக்கு நன்றி கூறியதோடு, நீங்கள் சொல்லும்படி நடப்பது தன்னுடைய கடமை என்றும், உங்கள் கொள்கைகளை என்றும் பின் தொடர்வேன் என்றும் நான் என் நாட்டை நேசிப்பதால் புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.