1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:43 IST)

விவசாயிகளின் உயிர் காப்போம் சொல்லாதே செய் என்ற அமைப்பை தொடங்கிய ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் விவசாயிகளுக்கு உதவுவதற்காக புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் வறட்சி  காரணமாக விவசாயிகள் பலர் உயிர் இழந்துள்ளனர். பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 
தைத்து வறுமையால் வாடும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ், களின் உயிர் காப்போம் சொல்லாதே செய்”  என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி உள்ளார்.
 
இதற்காக நிதி திரட்டி வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக ராகவா லாரன்ஸ்  இன்று ரூ.1 கோடி நிதி வழங்கினார். மற்றவர்களிடமும் நிதி திரட்டி அதை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
 
சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில், நாகை மாவட்டம் ஆயக்குடியில் இறந்த விவசாயி கண்ணதாசன் குடும்பத்திற்கு ரூ.3  லட்சம் நிதி வழங்கினார். இதுபோல் மற்ற விவசாய குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.பி.சௌத்ரி, பி.வாசு, அம்மா கிரியேன்ஸ் சிவா பலரும் இந்த  அமைப்புக்கு நன்கொடை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.