செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : சனி, 9 செப்டம்பர் 2017 (14:41 IST)

சொன்ன சொல்லைக் காப்பாற்றாத சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ ரிலீஸ் தள்ளிப்போனதால், அவருடைய ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.


 
 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 
 
மலையாளத்தில் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். அத்துடன், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே. பாலாஜி, சினேகா, ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
 
ஆயுத பூஜை விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து விலகி, டிசம்பர் 22ஆம் தேதி, அதாவது கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத்தான் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
 
காரணம், இன்னும் 2 பாடல்களை ஷூட் செய்யவே இல்லையாம். அத்துடன், சென்சார் முறையில் சில மாற்றங்கள் செய்துள்ளதால், சென்சாருக்கு சில வாரங்கள் தேவைப்படும். இதனால் தான் ஷூட்டிங்கைத் தள்ளி வைத்தார்களாம்.