1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:19 IST)

சின்சான், டோரா ரசிகர்கள் சார்பாக..! – வைரலாகும் ஈஸ்வரன் பட வாழ்த்து கமெண்டுகள்!

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் பட ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் அதற்கு ரசிகர்கள் இட்டு வரும் கமெண்டுகள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லரை தொடர்ந்து அதன் கமெண்ட் பகுதியில் சிலர் இட்டு வரும் கமெண்டுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

சின்சான் ரசிகர் மன்றம் சார்பாக, டோரா பூச்சி ரசிகர் மன்றம் சார்பாக என தொடங்கி சோட்டா பீம், பால்வண்ணம் பிள்ளை, பறவை முனியம்மா, மன்சூர் அலிகான் என பலரது ரசிகர்கள் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் என பலர் பதிவிட்டு வருவது சிரிக்க வைக்கும் வகையில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.