1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (22:22 IST)

NGK என்னவாக இருக்கும்? புரட்சியாளர்களுடன் ஒப்பிடும் ரசிகர்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் தலைப்புக்கு அர்த்தம் புரியாமல் ரசிகர்கள் அவர்களது யூகங்களை டுவீட் செய்து வருகின்றனர்.

 
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது. போஸ்டரில் படத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. NGK என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 
 
NGK என்றால் என்னவாக இருக்கும் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். செல்வராகவன் காரணம் இல்லாமல் இதுபோன்று வைக்க மாட்டார். ஏதாவது அர்த்தம் இருக்கும் என்று சிலர் கூறிவருகின்றனர்.
 
சிலர் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயரான நந்தகோபாலன் குமரன் என்று தெரிவித்துள்ளனர். சிலர் சூர்யாவின் புகைப்படம் சேகுவாரா கெட்டப்பில் இருப்பதால் சேகுவாராவுடன் ஒப்பிட்டுள்ளனர். N- Napoleon, G-Guevera, K-Karl Marx என்று பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்த குழப்பத்திற்கு இயக்குநர் செல்வராகவனால் மட்டுமே விளக்கம் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.