ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (22:01 IST)

பிரபல நடிகரை துரத்திச் சென்று கல்லால் தாக்கிய ரசிகர்கள்

பெங்களூரில் பிரபல கன்னட நடிகர் திக்‌ஷித் ஷெட்டியை ரசிகர்கள் துரத்திச் சென்று கற்களால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பிரபல கன்னட நடிகர் திக்‌ஷித் ஷெட்டியின் கார் பொது இடத்தில் நிற்பதை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு அவருக்காக காத்துக்கொண்டு இருந்துள்ளனர். திக்‌ஷித் ஷெட்டி கார் அருகே வந்ததும் அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்பதை தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் திக்‌ஷித் ஷெட்டி, நீங்கள் மது போதையில் உள்ளதால் உங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறி காரில் ஏறி சென்றுவிட்டார். இதில் கோபமடைந்த ரசிகர்கள் அவரது காரை பின்தொடர்ந்து சென்று கற்களால் தாக்கியுள்ளனர்.
 
இதில் திக்‌ஷித் ஷெட்டியின் கார் பலத்த சேதமடைந்தது. திக்‌ஷித் ஷெட்டி சிறு காயங்களுடன் தப்பினார். இதையடுத்து தற்போது திக்‌ஷித் ஷெட்டி மீது தாக்குதல் நடத்திய ரசிகர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.